Crowdsource

4.1
16.1ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
டீன் ஏஜர்கள்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வேடிக்கையான, எளிய கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்! ஒவ்வொரு நிலையாக முன்னேறிச் செல்லுங்கள், பேட்ஜ்களை அன்லாக் செய்யுங்கள், உங்கள் சாதனைகளைப் பகிருங்கள்! உங்கள் பகுதியில் Google தயாரிப்புகள் சிறப்பாகச் செயல்பட உங்கள் தன்னார்வப் பங்களிப்புகள் உதவும். அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள Google Assistantடுக்குக் கற்றுக்கொடுங்கள், உங்கள் மொழிக்கேற்ப Google Translateடை மேம்படுத்துங்கள், பொருட்களை அடையாளம் காண Google Photosஸுக்கு உதவுங்கள். பல்வேறு வகையான பங்களிப்புகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இவை அவற்றில் ஒரு சிறிய பகுதிதான். நீங்கள் இவற்றின் மூலம் Googleளை உள்ளூர் அளவிலும் உலகளவிலும் மேம்படுத்தலாம்.



Googleளின் பங்களிப்பாளர்கள் சமூகத்தில் சேர, இப்பணிகளில் சிலவற்றைச் செய்து பாருங்கள்:



கலாச்சாரம் சார்ந்த படச் சரிபார்ப்பு: எளிய ஆம்/இல்லை கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் படங்களின் கலாச்சாரத் துல்லியத்தைச் சரிபாருங்கள்.

கேள்வியைப் புரிந்துகொள்ளுதல்: வழங்கப்பட்ட கேள்வியை நீங்கள் எந்தளவிற்குப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

பட ஒப்பீடு: எந்தப் படம் உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதை எங்களிடம் கூறுங்கள்.

கையெழுத்துச் சரிபார்ப்பு: நீங்கள் பார்க்கும் வார்த்தைகளுடன் கையெழுத்து பொருந்துகிறதா எனப் பார்த்து எங்களிடம் கூறுங்கள்.

கையெழுத்தைப் படித்துப் பார்த்தல்: கையெழுத்தை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா எனப் படித்துப் பார்த்து எங்களிடம் கூறுங்கள்.

கையெழுத்து ஒப்பீடு: இரு கையெழுத்துகளையும் ஒப்பிட்டு உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுங்கள்.

புள்ளிச் சரிபார்ப்பு: மையப் பகுதி சப்ஜெக்ட்டிற்கு மேலே இருப்பதைச் சரிபாருங்கள்.

உணவு ஒப்பீடு: இரு உணவுப் படங்களின் பண்புகளை ஒப்பிடுங்கள்.

ஆடியோ நன்கொடை: பேச்சுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உங்கள் குரலை ரெக்கார்டு செய்யுங்கள்.

உணவு குறித்த உண்மைகள்: ஓர் உணவில் குறிப்பிட்ட பண்புகள் இருந்தால் அதுகுறித்து எங்களிடம் தெரிவியுங்கள்.

உணவின் பெயர் கூறுதல்: ஒரு படத்தில் இருப்பது என்ன உணவு என எங்களிடம் தெரிவியுங்கள்.

சொற்பொருள் ஒற்றுமை: இரு சொற்றொடர்களும் ஒரே அர்த்தத்தைக் கொண்டுள்ளனவா எனத் தீர்மானியுங்கள்.

விளக்கப்படத்தைப் புரிந்துகொள்ளுதல்: விளக்கப்படங்கள் புரிந்துகொள்ளக்கூடியவையா, நம்பகமானவையா எனத் தீர்மானியுங்கள்.

விரலால் நகர்த்தி உள்ளிடுதல்: உங்களுக்குக் காட்டப்படும் வார்த்தைகளைக் கீபோர்டில் விரல்களால் நகர்த்தி உள்ளிடுங்கள்.

ஆடியோ சரிபார்ப்பு: ஒரு சிறிய ஆடியோ கிளிப்பைக் கேட்டு அதிலுள்ள உச்சரிப்பு உங்கள் மொழியில் இயல்பாக ஒலிக்கிறதா எனத் தீர்மானியுங்கள்.

பட விளக்கம்: பேச்சுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த, உங்களுக்கு வழங்கப்பட்ட படங்களைப் பற்றி உங்கள் குரலில் விவரிப்பதை ரெக்கார்டு செய்யுங்கள்.

பட லேபிள் சரிபார்ப்பு: படங்கள் சரியாகக் குறியிடப்பட்டுள்ளனவா என எங்களிடம் தெரிவியுங்கள்.

படமெடுத்தல்: உங்கள் பகுதிகளைச் சார்ந்த படங்களைச் சேகரித்துப் பகிருங்கள்.

மொழிபெயர்ப்பு: சொற்றொடர்களையும் வார்த்தைகளையும் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயருங்கள்.

மொழிபெயர்ப்பைச் சரிபார்த்தல்: சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொற்றொடர்களைத் தேர்ந்தெடுங்கள்.

கையெழுத்து அறிதல்: கையால் எழுதப்பட்ட வார்த்தை/வாக்கியத்தைப் பார்த்து அதை டைப் செய்யுங்கள்.

உணர்வு மதிப்பீடு: உங்கள் மொழியிலுள்ள ஒரு வாக்கியம் நேர்மறையானதா எதிர்மறையானதா நடுநிலையானதா எனத் தீர்மானியுங்கள்.

ஸ்மார்ட் கேமரா (Android Lollipop 5.0க்குப் பிந்தைய பதிப்பு தேவை): கேமராவில் ஏதேனுமொரு பொருளை ஃபோகஸ் செய்து கேமராவால் அதைக் கண்டறிய முடிகிறதா எனப் பாருங்கள்.



ஒவ்வொரு முறை நீங்கள் பதிலளிக்கும்போதும், எதிர்காலத்தில் Google தயாரிப்புகள் அனைவருக்கும் மிக ஏற்றவையாகச் செயல்பட உதவுகிறீர்கள். உள்ளூர் சந்திப்புக் கூட்டங்களில் மற்ற பங்களிப்பாளர்களைச் சந்திப்பது, Googlerகளையும் மற்ற பங்களிப்பாளர்களையும் ஆன்லைனில் சந்திப்பதற்கான பிரத்தியேக அழைப்புகளைப் பெறுவது, Crowdsourceஸின் சமூகச் சேனல்களில் இடம்பெறுவது போன்ற சலுகைகளையும் உங்கள் உதவிக்கான ரிவார்டாகப் பெறுவீர்கள். நீங்கள் ரயிலில் இருக்கும்போதோ பேருந்து நிறுத்தத்தில் இருக்கும்போதோ வரிசையில் காத்திருக்கும்போதோ உங்கள் உள்ளூர் சமூகத்திற்கு Google சிறப்பாகச் செயல்பட சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
19 மே, 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 5 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.0
15.6ஆ கருத்துகள்
Babu Babu (Babuji)
3 ஆகஸ்ட், 2022
Super friend good thanks
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Google பயனர்
24 நவம்பர், 2019
நல்லா இருக்கு
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

கலாச்சாரம் சார்ந்த படச் சரிபார்ப்பு! எளிய ஆம்/இல்லை கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் படங்களின் கலாச்சாரத் துல்லியத்தைச் சரிபாருங்கள்.